+என்னவள் நீயேயென் உயிரெழுத்தாவாய்+
நாணலுக்கும் நாணம் வந்ததோ
==உன்னகம் பார்த்து தலைகுனிந்ததோ
கானலும் நிஜமாகக் காத்திருக்குதோ
==உன்னடி யோசையைப் பார்த்திருக்குதோ
அன்னமும் அமைதியாய் ஆர்ப்பரிக்குதோ
==அதனிணை கண்டதாய் ஆட்டமிட்டதோ
மன்னவ னிவனின் கையெழுத்தானாய்
==என்னவள் நீயேயென் உயிரெழுத்தாவாய்!

