சுட்ட கதை

ஒருத்தன், துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி மிரட்டி பணத்த எல்லாம் வாங்கினான்.

அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கிக் காரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' .
அவன், 'ஆமா..நான் பார்த்தேன்..' என்றான்.


துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான்.
உடனே சுத்தி பார்த்தான்.

அங்கே ஒரு கணவன்-மனைவி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க..

துப்பாக்கிக்காரன் அவங்கள நெருங்கி கேட்டான், 'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..?'

உடனே அந்த கணவன் சொன்னான், "நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன்"

எழுதியவர் : முக நூல் (23-Aug-14, 3:16 pm)
Tanglish : sutta kathai
பார்வை : 220

சிறந்த நகைச்சுவைகள்

மேலே