மரணித்த பின்பும் என் நெற்றி காசை எடுக்க வந்தாய்
முகம் பார்த்தாய் ;
ஏனோ அகம் பார்க்க மறந்தாய் ;
நான் உன் அகம் பார்த்தேன் ;
நீ நான் உன் வீட்டு அகம் பார்பதாக எண்ணி
பிச்சைகாரன் என துரத்தி விட்டாய் ;
உயிர் நொந்தே விஷம் குடித்தேன் ;
மரணித்த பின்பும் என்
நெற்றி காசை எடுக்க வந்தாய் நீ ,
யார் பிச்சைகாரன் ? நீயா ? நானா ?