வேண்டியதெல்லாம்
உன்னையே நேசி
ஆரோக்கியம் கொள்வாய்
அயலவனை நேசி
ஆண்டவனை கொள்வாய்
நல்லதை நினை
நண்பனைக் கொள்வாய்
நேர்மையை நாடு
தீர்ப்பினைக் கொடுப்பாய்
உழைப்பினைத் தேடு
உலகினைக் காப்பாய்
ஊக்கத்தை கொடு
வறுமையை ஒழிப்பாய்
கற்றதை சொல்லு
மாற்றத்தை கொடுப்பாய்
எழுத்தினை வாசி
பண்பினை சொல்லுவாய்
அன்பையே போதி
அகிலமே கொள்வாய்
அச்சத்தை விலக்கு
அடைவதாம் இலக்கு
தர்மத்தை விரும்பு
தரணியே உன்னிடம்
வீரத்தை வில்லாக்கு
வெற்றியை உனக்காக்கு
தடைகளைத் தாண்டு
படைகளே உன்னிடம்
போரினைக் கொல்
பார்தனை வெல்வாய்
பரிவுடன் வாழ
பிரிவின்றி வாழ்வோம்
தாய்மொழியே போற்று
வாய்மொழியே தமிழாக

