“ நாம் மாறவேண்டும் “

தெருக்குழாயில்
வண்ண நிறங்களுடன்
வரிசையில் நிற்கின்றன
தண்ணீர் குடங்கள்....
தவறியும் விழுகாதா தண்ணீர் துளிகள்...- (வறட்சி)

சூல் கொண்ட மேகம் தினம் கூடும் வானில்
சிறு காற்று அடித்தாலும்
கலைந்தோடும் போதில்
இயற்கையைக் குறைகூறும்
துனிவெவர்க்கு உண்டு ? - (உலக வெப்பமயமாதல்)

தற்கொலை என்பது
ஒரு நொடி முட்டாள் எண்ணம்... - (கோழைகள்)

கவலைகள் தீர்க்கும் மருந்து
தயிருக்குள் இருக்கும்
வெண்ணெய் போல... - (இயற்கை மருத்துவம்)

கடந்து வந்த பாதையை
திரும்பி பார்த்தேன்
தொடங்கிய இடம் தெரியவில்லை... - (இலட்சியம் இல்லா மனிதன்)

பெண் சிசு கொலைகள்
குறைந்து விட்டன
ஆம் எல்லாம்...
பெண் சிசு கரு கலைப்பு ஆனதால்... - (விஞ்ஞான வளர்ச்சி)

உன் முதல் நலம் விரும்பி
உன் பெற்றோர்கள் -நீ
விரும்பி சேர்த்து விடாதே
காப்பகத்தில் அவர்களை...-(சுமை)

கைரேகைகள் தேய்ந்தும்
கவலைகள் மறப்பவன்..
தன் கையே தன் நாட்டிற்கு
உதவி என்ற உண்மை உரைப்பவன்..-(தேசபக்தன்)

அலைகளைத் தாண்டியும் ஒலித்துக்
கொண்டேயிருக்கும் அலறல்கள்... - (தமிழ் அகதிகள்)

எல்லா மனிதரும் ஏவாள் பிள்ளை என்றால்
ஏன் சண்டை நாட்டுக்குள்... -(சாதி,சமய வேறுபாடு)

சிறு துளிக்குள் ஒரு கடலாய்
ஒற்றை வரியில் தத்துவமும்
ஏழு சொல்லில் இரகசியமும்... - (திருக்குறள்)

திருக்குறளைப் பின்பற்றி வாழ்வோம்!!!

எழுதியவர் : சிவசங்கரி (25-Aug-14, 11:15 am)
பார்வை : 104

மேலே