விடிவு தருவாய் விநாயகா

வங்கக்கடலின்
குளிர் காற்றைச்
சுவாசித்து பல
இன்னல்களையும்
துன்பங்களையும்
சந்தித்து சிரித்து
வாழும் இலங்கையில்
சிறிய கிராமமாம்
தளவாய் கிராமம்.

நான்கு பக்கமும் பசுமையான
காடு சோர்வு இல்லா
உழைப்பாளி இக்கிராமத்தில்
எழுந்தருளிய
செல்லப் பிள்ளையாராம்
சித்தி வினாயகரின்
திருநாளாக இன்று
உருவானது திருவிழா.

கோலாகலமான
கொண்டாட்டம்
கூடி அலங்கரிக்கும்
இளைஞர் கூட்டம்
கொடுமைகளை நீ
அழித்து கோடி அருள்
புரியவேண்டும்
முக்கண்ணனிண்
மூத்த மகனே.

இறப்பு இல்லா இறைவா
இடறி விழுந்தவனையும்
தடம் புரண்டு வாழ்க்கை
நடத்தும் மனிதனையும்
தவறுதலாக தவறு செய்யும்
உயிர்களையும் உன்
தும்பிக்கை கொண்டு தூக்கி
நம்பிக்கை ஊட்டி காக்க
வேண்டும் யானை முகத்தோனே.

தெருவோரத் தெய்வம்
என்னும் இழிவுப் பேச்சை
நீ மன்னித்து தெருவோரக்
காவலனாய் நீ இருக்க
வேண்டும் அம்பலவானனே.

ஐயம் தவித்து அகிலம்
போற்றும் மக்களாய்
எங்கள் ஊர் வாழ
வேண்டும் ஐங்கரனே.

ஒய்யாரமாய் நீ அமர்ந்து
உழவு இயந்திரத்தில்
ஊர் சுற்றி வந்து
மகிழ்வோடு நீ உப்புக்
கடலில் இறங்கி துன்பத்தை
வாங்கி இன்பத்தை அள்ளிக்
கொடுக்க வேண்டும் சித்தி
வினாயகப் பெருமானே.

24=8=2014 தளவாய் சித்தி வினாயகர்
ஆலயத் திருவிழா
செல்லப் பிள்ளையாருக்கு
என் சின்னக் கவி=

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (25-Aug-14, 3:14 pm)
Tanglish : kavithai
பார்வை : 109

மேலே