திருமண வாழ்த்து

ராஜாவின் ரோஜாவே
மன சாந்தியே
மறு பிறப்பெடுத்தாய் எம் தமக்கையாய்
மல்லிகை சரத்தில் புது மொட்டாய்
நீ இணைந்தாய் இல்லத்தில்
என்றென்றும் தாங்கி நிற்போம்
குல கெளரவத்தை ....!

மாமியை அம்மாவாக்கி
மதிப்போடு வாழ்வோம் நாம்
பெற்றெடுத்த அன்னை இன்று
தத்து கொடுத்தனர் என்னில்
தமக்கையே மாற்று தாயில் தோன்றி
பூர்வஜென்மத்தை பூர்த்தி செய்வோம் வா

விளக்கொளியாய் ஜொலிப்போம்
அதில் பகைமைதனை அழிப்போம்
புன்சிரிப்பே பிரம்மாஸ்த்திரம்
கோபம் கொண்டவரை
அது கொண்டு வீழ்த்துவோம் வா ...!

ஒருமகவு பெற்றாலும்
ஊரார்க்கு உதவும் உள்ளதுடன் வளர்த்திடுவோம்
மைத்துனரின் கோபத்தை
தனிக்கும் அரு மருந்து நீயடி
நீ நடந்து வரும் தேரடி
நாளை உன்னை ஊர்மெச்சும் பாரடி
நானிருக்க உனக்கு கவலையென்ன கூரடி !

(மச்சானின் திருமணதிற்கு தந்த வாழ்த்து )

எழுதியவர் : கனகரத்தினம் (25-Aug-14, 10:42 pm)
Tanglish : thirumana vaazthu
பார்வை : 475

மேலே