சருகுகள் அல்ல
வீழ்ந்து
கிடக்க
நாம் ஒன்றும்
சருகுகள்
அல்ல....
சிறகு
முளைத்து
சாம்பலில்
பிறக்கும்
சமகாலப்
பீனிக்ஸ்
பறவைகள்.....!!
ஓடிக்கொண்டிருக்கும்
வரை
விரட்டுபவன்
விடமாட்டான்.....ஒருமுறை
வீழ்ந்து
பார்.....வீரம்
பிறக்கலாம்
உனக்கும்......!!
காலம்
என்றும்
கனியாது.....நீ
துணிவின்றி
நின்றால்....!!
கடிகார
முட்களைப்
பார்த்து
நீ ஓடாதே.....உனைப்
பார்த்து
அவை
ஓடாமல்
நிற்கட்டும்......!!
வெற்றியின்
விளிம்பில்
நீ
இல்லை.....வெற்றிக்குள்
தான்
நிற்கிறாய்
பதக்கங்களை
வாங்காமல்.....!!