ஏக்கமும் தாக்கமும்

பருவ வயதுவரும் முன்பே பக்குவப்பட்டேன்
ஏட்டுப் படிப்புடன் நாட்டு நடப்பையும்
படித்தேன்.

பாசம் வளர்த்தேன் உறவை மதித்தேன்
படிப் படியாக பருவ வயதையும்
அடைந்தேன்.

பல சுமைகள் என் தலைமேல் ஏற்றப்பட்டன
பெற்றோரைப் கவனிப்பது உடன் பிறப்புக்கு
திருமணம் நடத்த வேண்டிய கடமை..

கடமை என்னைக் கட்டிப் போட்டாலும்
வருவம் என்னை விடவில்லை.

வருவவயது ஆசைகள் எட்டிப் பார்த்தன
ஆசை ஒரு புரம் கடமை மறு புரம்
இடையில் நான்

எதை நான் தெரிவு செய்வது இளமை ஆசைகளைக்
கை காட்ட புத்தியோ கடமையை ஞாபகப் படுத்தியது
கடமைதான் என்று முடிவு எடுத்தேன்

ஆசையைத் தள்ளி வைத்தேன் கொஞ்ச நாள்
தானே என்று என் கடமையில் தீவிரமாக
இறங்கினேன்.

கடமையைக் கொஞ்சம் கொஞ்சமாக
நிறைவேற்றி விட்டு என் ஆசையைத்
தட்டி எழுப்பினேன்.

ஆசை என்னை நாடி வந்தது ஆனால்
நிறைவேற வழியில்லை என் இளமை
போய் முதுமை என்னை வரவேற்கின்றது

உடல் தளர்ந்து விட்டாலும் என் உள்ளத்தில்
உணர்ச்சி துளிர் விடுகின்றது இருந்தும்
ஊமையாக நான் வாழ்வை நோக்கிப்
பயணம் செய்கின்றேன்.

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (26-Aug-14, 6:53 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : kavithai
பார்வை : 72

மேலே