ஏழையின் ஏக்கம்
பட்டாடை உடுத்தி பவனி வர
ஆசை அனால் பணம் இல்லை
பட்டுமெத்தை மேல் படுத்து உருண்டு
விளையாட ஆசை ஆனால் பணம்
இல்லை.
தினமும் அருசுவை உணவு உண்ண
ஆசை ஆனால் பணம் இல்லை
விதம் விதமாக நகை போட்டு
அழகு பார்க்க ஆசை ஆனால்
பணம் இல்லை.
வானூர்தியில் உலகம் சுற்றி வர
ஆசை ஆனால் பணம் இல்லை
மாடி வீட்டின் மேல் இருந்து வேடிக்கை
பார்க்க ஆசை ஆனால் பணம் இல்லை.
சீரும் சிறப்புமாகத் திருமணம் நடக்க
வேண்டும் என்று ஆசை ஆனால்
பணம் இல்லை.
பல இல்லங்களைத் தேடிப் போய்
நிறையப் பண உதவி செய்ய ஆசை
ஆனால் பணம் இல்லை.
இந்தப் பணத்துக்காகப் பல வேலை தேடிச்
செய்ய ஆசை ஆனால் படிப்பு இல்லை..
மனதில் உறுதி உள்ளது இதயத்தில்
ஆசை உள்ளது நிறைவேற வழி
இல்லை.
ஏழையாகப் பிறந்தேன் ஏழையாக
வளர்ந்தேன் ஏழையாக வாழ்கின்றேன்
ஆனால் பணத்துக்காக அழுகின்றேன்