நம்பிக்கை
நான் உயர உயர போகிறேன்
உள்ளம் தெளிந்து தெளிந்து போகிறேன்
வானத்தைத் தொட்டுவிட ஆசை கொண்டு
மெல்ல மெல்ல பறந்து போகிறேன்
என்ன தடைகள் என்னைக் கொல்லும்
என் மனதில் உறுதி உண்டு
மண்ணைப் பிளந்து கொண்டு துளிர்விடுமொரு
விதையைப் போலே வளரப் போகிறேன் |