பலம் கொண்டவன் மனிதன்
மேகங்கள் உருளுகின்றது
அகிலமும் அதிர்கின்றது,
மேகங்கள் உரசும் போது
ஒளி கீற்றுகளாக மின்னல்கள்,
மேகங்கள் ஒன்றுடன் ஓன்று மோதும் போது
விண்ணையும் மண்ணையும்
நிலைகுலையச் செய்யும் இடி ஓசை ,
மேகங்கள் ஓன்று சேர்ந்து
மந்தாரம் அடையும் போது
மழை நீர் சொரிகின்றது ,
இயற்கையின் நிலையில்
எத்தனை மாற்றங்கள்
அத்தனையும் மனிதனுக்கு சாதகமாகவும்
சிலவேளையில் பாதகமாகவும்,
இறைவன் படைப்பில் மனிதன் தள்ளாடுகிறான் .
ஆனாலும் மனிதன் பலம் கொண்டவன்
இயற்கையின் சேஷ்டைகள் அனைத்தையும்
தன் அறிவு என்னும் திறமையினால்
அடக்கவும் ஆளவும் கற்றுக் கொண்டான் .
ஆண்டவன் முன்னே நாமெல்லாம்
சுழலுகின்ற பம்பரங்கள்
ஆட்டுவித்தால் ஆடுகின்றோம்
அடக்கி விட்டால் அடங்கிடுவோம்
யார் நினைப்பார் உலகம் ஒரு மேடை என
ஒவ்வொரு வேடங்கள் ஒவ்வொருவருக்கு
ஏற்றுக் கொண்டோம் பொறுப்பாக
காக்க வேண்டும் நம்மை நாமே ,
எதிர் நீச்சல் போட்டிடுவோம்
வாழும்வரை தோல்வி இல்லை.
மனிதன் மனிதனாக வாழ
வல்ல பல வழிகள் உண்டு உலகில்,
இறைவன் படைப்பில் இயற்கை
மனிதன் படைப்பில் வெற்றி