வானவில் பெண் வர்க்க குறியீடு

இது வெறும் வடிவமல்ல ...
பெண் வர்க்கத்தின் குறியீடு
பெண் வளைக்கப்பட்டச் சுவடு ....

இது வெறும் வண்ணங்களல்ல
நாயகிகளின் துப்பட்டாக்கள்
துப்பட்டாக்கள் தோட்டாக்களாகும்போது
வானவில் நிமிரும் .......

வேட்கையுடன் கேட்பது
வெற்றியை அல்ல ...
சமுதாயத்தில் சமத்துவம் ....

மேடைப் பேச்சாளர்கள்
அதிகம் என்பதால்
எதிரியை நாங்கள் அறியோம்......

காவிரி பாலாறு வரிசையில்
எங்கள் பிரச்சனையையும்
ஒரு பருவமாக்கிக்கொண்டார்கள்
அரசியல்வாதிகள்.....

நாங்கள் எழுவது
நிறப் பிரிகையல்ல
இட ஒதுக்கீடுப் பிரச்சனை ....

எங்கள் அழகுகளை
இரசிக்கும் அவர்கள்
நாங்கள் எப்பொழுதும்
வளைந்திருப்பதையே விரும்புகிறார்கள் .....

நீதிக் கேட்க
காற்சிலம்பு தொலையவும்
கோவலன் மாயவும் தேவையில்லை ....

வெள்ளைத்தாள் போதும்
புரட்சி வெடிக்க
புதுயுகம் படைக்க .....

பார்வைதாசன் ....

எழுதியவர் : பார்வைதாசன் (26-Aug-14, 3:08 pm)
Tanglish : vaanavil
பார்வை : 239

மேலே