இயல்பை மாற்றும் காதல்

உரசிக்கொண்டது
பார்வை என்றாலும்
வலிப்பது என்னமோ
இதயத்தில்.....
பிறந்ததிலிருந்தே
வாயாடி என்றாலும்
ஊமையாகிறேன்
உன்னை பார்க்கும்
போது மட்டும்
தாய் மொழி
நமக்கு உண்டு என்றாலும்
தாயகங்கள் மட்டும்
தவிக்கின்றன நம்மிடையே
இயல்புகளை மாற்றுவதுதான்
காதலா.......
இல்லை காதலுக்காக
மாறுவதுதான் இயல்பா.?

எழுதியவர் : farmija (29-Aug-14, 1:36 pm)
பார்வை : 138

மேலே