எல்லை மீறாதே
வாசமலர் அழகு தான்
வாடிவிடாதவரை
கொட்டும் மழை அழகு தான்
அளவோடு இருக்கும் வரை
தென்றல் அழகு தான்
புயலாக மாறாத வரை
பனித்துளி அழகு தான்
சூரியன் பார்க்காத வரை
நட்பும் அழகு தான்
நம்பிக்கை இருக்கும் வரை
எல்லாமே அழகு தான்
எல்லை மீறாத வரை ..!!