பாவம் நீ
நான் உன்னை பார்க்காமல் இருந்தால்
மறந்து விடுவேன் என்கிற
நினைப்பை
தூக்கி போடு ஓரமாய்.
அட முட்டாளே!
உன்னை நினைத்தாலே
பாவமாய் இருக்கிறது எனக்கு.
உன் நினைவு என்னும் விதையை
எனக்குள் ஆழமாய் ஊன்றி
உரமும் போட்டு
வளர்த்து வருகிறாயே நீ
உனக்கே தெரியாமல் !