நானும் பாஞ்சாலியும்
நானும் என் நண்பனும்
பால்யம்
பள்ளி கல்லூரி
அன்று வெளியான சினிமா
இளையராஜா,
ரஹ்மான் இசை
வடிவேல்
கவுண்டமணி நகைச்சுவை
ஆழிப்பேரலை
அழகிய பெண்கள்
அரசியல் அரிசிப்பொங்கல்
பெரியார் பேரிடர்
கல்வி கவிதை
காதல் காமம்
ஜெயகாந்தன் புதுமைபித்தன்
பூகம்பம் போர் என
நானும் அவனும்
எதை பற்றிதான்
பேசிக்கொள்ளவில்லை
நட்பு காதலாக கசிந்தது
பாஞ்சாலி கர்ணனை கணவனாக
வரித்துக்கொள்ள விரும்பியது போல்
நானும் என் நண்பனை!!!!!!!!!!!!!
காதலை சொல்ல
தருணம் அமைகையில்
தவறிவிட்டான் என் நண்பன்
இல்லை இல்லை
என் தலைவன்
அழுது ஆயிற்று
ஆண்டுகள் சில
வீடிற்கு பாரமாம்
கட்டிவிட்டார்கள் என்னை
ஒருவன் தலையில்
வாசிப்பை நேசிப்பவள் நான்
உங்களுக்கு
வாசிக்கப் பிடிக்குமா....
இது என் கேள்வி
வாசிக்க நான் வேலை
வெட்டி இல்லாதவனா
அவன் பதில்.........
அன்றே உறைந்து விட்டன
என் உணர்வுகள்
பாஞ்சாலிக்கோ
ஐந்து கணவன்
எனக்கோ
ஐந்து கோடி குணங்கள்
நிரம்பிய ஒரு கணவன்
என்றேனும்
என் வாசிப்பை
மீட்டெடுக்க
ஒரு கருவி
கிடைக்குமா??????????