நம்ம ஊர் போல வருமா

இங்கிருந்து நம்ம ஊர் வர ஆசை
நம்ம ஊரிலிருப்பவனுக்கு இங்கு வர ஆசை..

இரயலிலும் விமானத்திலும் நுழையும்போது
பதறும் மனம் கலங்கும் கண்கள்..

உற்சாசகமாய்தான் ஊருக்கு வருகிறோம்
உறக்கமற்று இங்கு தவிக்கிறோம்

புகைப்படங்களில் மட்டுமே ஜொலிக்கிறோம்
உண்மையில் உள்ளுக்குள் புலம்புகிறோம்


நம்மூர் நினைவுகள் எல்லாம்
மறப்பதிற்கு மனமின்றி தவிக்கிறோம்


அழும் எங்கள் குழந்தைகளுக்கும்
ஆறுதல் சொல்லின்றி தவிக்கிறோம்


விடுமுறைகள் கூட விரும்பாமல்
உழைக்கிறோம் உன்னத குடும்பத்திற்கு

பெற்றெடுத்த தாயினை பார்க்க
பல வருடம் ஆகிப் போகுது

தூக்கி வளர்த்த அப்பாவை
தாங்கி நிற்க முடியாமலாகுது

பழகிய நண்பர்களின் நிகழ்ச்சிகள்
பாசமான உறவுகளின் இழப்புகளை

இணையத்தில் மட்டும் பார்த்து
இதயம் கனத்து போகிறது..

பிஞ்சு குழந்தைகள் பாட்டிதாத்தாவிடம்
கொஞ்சி பேசிட பஞ்சமாகி போகிறது

கட்டணங்களில் அருந்தும் குடிநீர்
தெரு பைப்களை ஞாபகபடுத்துகிறது

விசாவிலும் பாஸ் போட்டிலும்
எங்களை பார்சல் செய்கிறோம்

உடன் பிறப்பின் உணர்வுகளை
வாட்சாப்பில் மட்டும் பார்க்கிறோம்

திருமண தம்பதிகளை கூட
குழந்தை பிறந்தபின் வாழ்த்துகிறோம்


பால்வாடி சென்ற பச்சிளங்குழந்தைகளை
கல்லூரி செல்லும்போது காண்கிறோம்

இளமையாய் துள்ளிய நண்பர்களை
இல்லத் தலைவராகிப் போகிறார்கள்


ஊர் தெய்வங்களை வணங்கும் பாக்யங்கூட
பேஷ் புக்கில் புகைப்படம் வந்தபின்தான்

நீண்ட நாள் பாசங்களின் தொலைவும்
மிக நீளமாகிப் போனது..

எங்கள் சம்பாத்யம் என்ன தருகிறது
உப்பான கண்ணீரும் உப்பற்ற தண்ணீரும்தான்..

குடும்பச்சுமையும் கல்வித் திறனும்
மீண்டும் இங்கு அனுப்பிவிடுகிறது

தாய்மண்ணில் தவழ ஆசைகள்
தாகங்களாய் இன்னும் தொடர்கிறது..

எழுதியவர் : பிரியா பாரதி - தூத்துக்குட (30-Aug-14, 10:41 am)
சேர்த்தது : PRIYA BHARATHI
பார்வை : 511

மேலே