கனவுக்கூடு

நம்பிக்கைப் பெருவெளி கடந்து -அங்கே
எங்கோ அமாவாசை இருள்வெளி!!
நட்சத்திரப் புள்ளி ஒன்று வெகுதூரமாய்
ஒளி மின்னலாயும் ஒளித்தும்
தெளிவற்றுப் பார்வையில்!!!

கனத்த இருள் சாகரத்தில்
மெதுவாய் கரைந்தபடி தேடலின் வீரியம்!!
சந்தியாகாலப் புஷ்பங்கள் முகிழ் விரிப்பதென்னவோ
சந்தோசத் தருணங்களின் எதிர்பார்ப்புடன்...

விந்தையோ இல்லை விதியோ
சிந்தையில் நிறைவு சில கணம் கூட
சிலருக்கு நிலைப்பதில்லை!

கலங்கிய சித்தம் காணாமற் புதைத்து
கலந்து விடு வானில்.. யாருக்கேனும்
கனவுக் கூடு நிஜமாய்க் கட்ட உந்தன்
கனிந்த நெஞ்சத்து நட்சத்திர ஒளிப்புள்ளி
கரம் கொடுக்கும் பேறு பெற்றிருக்கலாம்!

---கீர்த்தனா---

எழுதியவர் : ---கீர்த்தனா--- (கீதா ரவி) (31-Aug-14, 5:04 pm)
பார்வை : 82

மேலே