கீர்த்தனா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கீர்த்தனா |
இடம் | : Norway |
பிறந்த தேதி | : 07-Oct-1967 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 465 |
புள்ளி | : 90 |
சிறகு உதிர்த்த இறகொன்று
சுமக்க முடியாத பிரிவின்
கனத்துடனான கல்லறைத்
தடங்களாய் உன் சுவடுகள்
நிராசையாகிப் போன
ஆசைகள் புதையுண்ட மண்ணில்
மறக்க முயலும் உன்மீதான மையல்,
அவை முட்டி எழும் விதை மொட்டுக்கள்
சில மாற்றங்களின் வித்துக்கள்
மரணங்களில் பதியனிடப்பட்ட
கல்லறைச் செடிகளில்
பூத்துக் குலுங்கும்
புது மலர்கள்
சாவின் வாசம் அறியாதவை
இறப்பின் கரங்களில்
தவழும் மலர்கள் உறங்கும்
இதயங்களுக்குச் சொந்தமாவதில்லை
துணையிழந்து போனதற்காக
அச்சமில்லை எனக்கு
இணையென்ற சொல்லுக்கு
அர்த்தம் நீயுமில்லை
உன்னில் விரும்பித் தொலைத்த
என்னைப் பிரித்தெடுத்து
தொலை
நந்தவனத்தின் சிறப்பு
மலர்கள்
மலர்களின் சிறப்பு
மங்கையர் கூந்தல் !
----கவின் சாரலன்
வான் சிறப்பு
மழை !
பூமியின் சிறப்பு
பசுமை !
-----கவின் சாரலன்
எத்தனை அழகாய்
பிரபஞ்சம் படைத்தான்!
இத்தனை நிறங்கள்
கண்ணுக்கு விருந்தாய்!
காண்பதெல்லாம் கனவல்ல
கண்முன் அதிசய ஓவியமாய்!
பட்டாம்பூச்சிச் சிறகின் நேர்த்தி!
பட்டுப்பூவின் இதழின் நேர்த்தி!
வண்ணமயிலின் துள்ளும் ஆட்டம்!
நீலக் குயிலின் இனிமைப் பாட்டு!
பச்சைக் கிளியின் கொஞ்சும் பேச்சு!
மிதக்கும் வெண்ணாரைக் கூட்டம்!
தலையசைத்தாடும் தென்னங்கீற்று!
தடையின்றிப் பாயும் வெள்ளியருவி!
தொங்கி மிதக்கும் வெண்பஞ்சு மேகம்!
பொங்கி நுரைக்கும் நீலக் கடல்!
வெண்மணல் பரத்திய அழகிய கரை!
ஓங்கி உயர் மரகத மலைகள்!
மாருதம் வீசும் மருத நிலங்கள்!
இரவினை ஆளும் நிலா மகராணி!
இவளினைச் சூழ்ந்து நட்சத்திரத் தோழ
உங்களில் சிலருக்கு
கவிதையும் கதையும்
எழுதுவது என்பது
பொழுதுப்போக்கு..!
அல்லது
உணர்வுக்கு மருந்து.,
எனக்கோ...!
பெரும் அவமானங்களை
சந்தித்து, வாழ்வை வெறுத்து
இலட்சிய வெறிப்பிடித்து
ஓரே ஒரு சரித்திர
வெற்றியை வேட்டையாட
துடித்துக்கொண்டிருக்கும்
சராசரிக்கும் மேலான
காட்டுமிராண்டி எழுத்தாளன்.
“பைத்தியம்” என்றுகூட
எனை அழைத்துக்கொள்ளுங்கள்.
வருத்தப்பட எனக்கு நேரமில்லை .
## ஒரு நாள் ஒரு விரக்தியில் எழுதிய வரிகள் இவை. ஆனாலும் இவ்வரிகளில் நான் இருக்கிறேன் என்பதே உண்மை. ..!
நம்பிக்கைப் பெருவெளி கடந்து -அங்கே
எங்கோ அமாவாசை இருள்வெளி!!
நட்சத்திரப் புள்ளி ஒன்று வெகுதூரமாய்
ஒளி மின்னலாயும் ஒளித்தும்
தெளிவற்றுப் பார்வையில்!!!
கனத்த இருள் சாகரத்தில்
மெதுவாய் கரைந்தபடி தேடலின் வீரியம்!!
சந்தியாகாலப் புஷ்பங்கள் முகிழ் விரிப்பதென்னவோ
சந்தோசத் தருணங்களின் எதிர்பார்ப்புடன்...
விந்தையோ இல்லை விதியோ
சிந்தையில் நிறைவு சில கணம் கூட
சிலருக்கு நிலைப்பதில்லை!
கலங்கிய சித்தம் காணாமற் புதைத்து
கலந்து விடு வானில்.. யாருக்கேனும்
கனவுக் கூடு நிஜமாய்க் கட்ட உந்தன்
கனிந்த நெஞ்சத்து நட்சத்திர ஒளிப்புள்ளி
கரம் கொடுக்கும் பேறு பெற்றிருக்கலாம்!
---கீர்த்தனா---
கூட்டிக் கொள் கூட்டிக்கொள்...
பெற்றோரிடம் பாசம் நுகரும் நேரத்தினை!
வாசிப்புச்சுவாசிப்பின் அளவுகோலை!
மனிதம் கொழிக்கும் நல்மனதை!
மாண்புடன் நடக்கும் நன்மதிப்பை!
இயற்கையை காக்கும் விழிப்புணர்வை!
ஒளவை சொல்லிய நன்னெறியை!
ஐயன் சொல்லிய பாடங்களை!
இன்னும் இனியவை ஆயிரத்தை!
இனிக் கழிக்கின்ற பொருள் சொல்வேன்...
கனிவுடனே நீயும் கேள்!!
ஹார்மோன்கள் ஆட்டி வைக்கும்
இளவயது உடல்மாற்றம்!
விடம் போல குடியேறும்
மனதினிலே தடுமாற்றம்!
தடம் மாறும் எண்ணங்கள்
தடை தாண்ட இடம் தேடும்!
விடாது கருப்பு என
தொடத் துடித்து உனைத் துரத்தும்!
அடாத சகவாசம்
அடங்காமல் உனை அழிக்கும்!
விட்டுவிடாதே மொத்