இன்றோடு
இன்றோடு என்ஜீவன் முடிகிறது
---நாளை முதல் எனக்கு மறுபிறப்பு
இன்றோடு என்னாவி திரிகிறது
---நாளை முதல் எனக்கு சொர்கவாசம்
இன்றோடு என்தேடல் ஓய்கிறது
---நாளை முதல் எனக்கு இறைவனடி
இன்றோடு என்னிளமை சாகிறது
---நாளை முதல் எனக்கு சிசுஉருவம்
என்றேதான் சொன்னபடி வீழ்கிறதோ
---எப்போதும் சிரிக்கின்ற மலரினங்கள் ?
-விவேக்பாரதி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
