கறிவேப்பில்லை
என்னைப்
பெண் பார்க்க
இன்று
வந்த வரனுக்கு
பார்த்து பார்த்து
நான் செய்த
பலகாரங்களையும்
பரிமாறிய
பதார்த்தங்களையும்
கறிவேப்பிலையை கூட
ஒதுக்காமல்
ருசித்து சாப்பிட்டதை
ரசித்து
நான் பார்க்க
கடைசியில்
தான்
தெரிந்தது
கறிவேப்பிலையாகி போனது
நான் என்று....