சாலையில் குத்திய முள்

பளிங்கு பாதை தான்
காலில் பாதயணி கொண்டு
காலை பத்திரபடுத்தியும் பயனில்லை !
தலை கவசம்
தகுந்த ஆவணம்
வாகனத்தில்
மிதமான வேகம்
எல்லாம் இருந்தும்
இயல்பாக வசூலிகிறார்கள் கட்டணம் !
நடந்து செல்கையில்
குத்தாத முள்
வாகனத்தில் செல்கையில்
குத்தியது அதுவும்
நெஞ்சில் !