நகரிலுமா சாதியப் பேய்கள்

ஐ.டி துறையில் பணிபுரிந்து
அப்பார்ட்மெண்டில் குடியிருந்து
ஆங்கிலத்தில் உரையாடி
முக நூலில் உறவாடி
கோட் சூட் அணிந்துக் கொண்டு
பீட்சா பர்கர் கொரித்துக் கொண்டு
பாப் பாடல் ரசித்துக் கொண்டு
என்.டி.டிவி பார்த்துக் கொண்டு
அடையாளத்தை மாற்ற
அல்லாடிக் கொண்டிருக்கும்
நாகரிக நகரத்திலும்
சாதி வாழ்ந்துக்
கொண்டு தானிருக்கிறது....
அங்கும் சாதியப் பேய்
நிலைத்துக் கொண்டுதானிருக்கிறது..
நாம் என்ன சாதி
என்றறிய நண்பர் குடும்பம்
படும் பாடு நகைக்க வைக்கிறது....
நெஞ்சை பதைக்க செய்கிறது
இங்குமா தொடர்கிறது
சாதிய வேற்றுமைகள்..!

எழுதியவர் : சித்ரா ராஜ் (31-Aug-14, 9:54 pm)
பார்வை : 68

மேலே