எல்லாமே மூன்று எழுத்து
எல்லாமே மூன்று எழுத்து ...!!!
------------------------------------
எல்லா இடத்திலும் பின்பற்று ...
எல்லோர் இடத்திலும் செலுத்து ...
நீயும் ஞானியாவாய் ....
அன்பு ....!!!
#######
உறவுகளிடம் சிக்கி தவிக்கும்....
உதறிவிட்டால் வாழ்க்கை வெறுக்கும்...
இதுவும் ஒரு அழியாத கல்லறைதான் ...
பாசம் .....!!!
#######
உள்ளவன் இல்லாதவனுக்கும் ....
இருப்பவன் அனைவருக்கும் ....
வற்றாத ஊற்றாய் கொடுக்கணும் ...
கருணை ....!!!
########
இல்லாதவன் இருப்பதுபோல் ...
இருப்பவன் பிரபல்யத்துக்காகவும்
மாறி மாறி போடுவது ....
வேசம் .....!!!
#########
சந்தித்தால் வேதனையை தரும்
சந்திக்காமல் சாதித்தவர்கள் இல்லை
சிந்தித்து செயல்பட வைக்கும் கருவி
தோல்வி ....!!!
#########
நெருங்கும் போது கைவிட்டவரும் ....
கையில் கிடைத்த போது மமதையும் ....
தோல்வியை சந்தித்தால் கிடைப்பதும் ..
வெற்றி ....!!!
#########
நான் நானாக இல்லாமல் இருக்க
அவள் அவளாக இருக்காமல் ..
வாட்டி வதைப்பது இந்த .....
காதல் ....!!!
#########
நாவுக்கு எப்போதும் அழகு ...
மேடைக்கு எப்போதும் தேவை ...
நாணயத்தை எடுத்து காட்டும் ....
பேச்சு .....!!!
##########
இருந்தால் உயிர் என்கிறார்கள்
நின்றால் சவம் என்கிறார்கள் ...
உள் வெளியாக ஓடித்திரியும்
மூச்சு ......!!!
#########
ஆரம்பம் இருந்தால் நான் இருப்பேன்
என்னை அடையும் வரை அலைச்சல் ...
கிடைத்தவுடன் மகிழ்ச்சியாகும் ...
முடிவு .....!!!