பழித்தார மாம்தம்மின் மூத்த உளவாக லான் - ஆசாரக் கோவை 91

மோட்டுடைப் போர்வையோ(டு) ஏக்கழுத்துந் தாளிசைப்பும்
காட்டுளே யானும் பழித்தார மாம்தம்மின்
மூத்த உளவாக லான். 91 ஆசாரக் கோவை

பொருளுரை:

தம்மினும் மூத்தவர்கள் உள்ளபோது, காட்டிற்குள்ளே இருந்தாலும் கூட,
ஒருவர் உடலின் மீது போர்த்துவதும், இறுமாந்திருப்பதும், இரு தாளையும்
சேர்த்திணைத்து அட்டணைக்காலிட்டிருப்பதும் பழிக்கப்படும் செயலாகும்.

‘பழித்தார் மரம் தம்மின்' என்ற பாடங்கொண்டு மரங்கள் தம்மின் மூத்த
உளவாகலான் பழித்தார் என்றும் முடிக்கலாம்.

ஏக்கழுத்தும் - எடுத்த கழுத்து, அதாவது இறுமாப்புடன் தலை தூக்கி இருப்பது,

தாரம் - எல்லை. மோடு - உயர்வு; இங்கு மோடு என்பது இடைக்கு மேலுயர்ந்த
உடலைக் குறித்தது. மோட்டுடைப் போர்வையோடு என்பதற்கு உடம்பின்மேல்
உடையைப் போர்த்தலும் எனவுங் கூறலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Sep-14, 2:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 98

மேலே