மன மாறுதல்கள்
(1) நான் வீட்டை மாத்திட்டேன் அக்கம் பக்கம் இருக்கிறவங்க
மனிதப்பிறவிகளா என்ன ? ச்சே எப்பப் பார்த்தாலும் சண்டை கிழேயே
குடி இருக்கிற ஹவுஸ் ஓனர் சரியான முசுடு பக்கத்துக்கு வீட்டுக்காரன்
சரியான பொறமை பிடிச்சவன் எதிர் வீட்டுக்காரன் கேட்கவே வேண்டாம்
இது ஒரு சிலர் தங்கள் வீட்டை மாற்றியதற்கு சொல்லும் காரணங்கள் .
(2) நான் அந்த வேலையை விட்டுட்டேன் வேறு வேலையில் சேர்ந்திட்டேன்
எம். டி. கூப்பிட்டு திட்டினார் போயா நீயும் உன் வேலையும் என்று உதறி
தள்ளிட்டு வந்துட்டேன். இந்த வேலை இல்லேன்னா இன்னொரு வேலை
கிடைக்காமலா போயிரும்? ஏதோ சம்பளம் தருகிறார் என்பதற்காக
சொல்லுறதை எல்லாம் கேட்க முடியுமா?.
இது ஒரு சிலரின் வீராப்பு பேச்சு
(3) அவளோட யார் குடும்பம் நடத்துவா எதுக்கெடுத்தாலும் அழுகை ,கோபம் ,
நல்லா டிரஸ் பண்ணிக்க தெரியாது நாலு பேர்கிட்ட பழக தெரியாது வீட்டை
அழகா வச்சுக்க தெரியாது மனுஷன் வாழ்வானா அவ கூட? ஆறு மாசம்
எப்படித்தான் வாழ்ந்தேனோ தெரியல
இது மனைவியை பிரிந்த கணவன் சொல்லும் வார்த்தைகள்
இதைப்போல் கணவனை பிரிந்த மனைவியும் சொல்லகேட்டுருகிறேன்.
(4) இந்த வேலைக்காரி சுத்த மோசம் வேண்டாம் என்று வேறோருதியை
போட்டுருக்கிறேன்
இப்படி அடிக்கடி நாம் நம்மை சுற்றி இருப்பவற்றை மாற்றுகிறோம்.
சரி வீட்டை வேலையை நண்பர்களை வேலைக்காரியை ,,,,ஏன் கணவன்
மனைவியை ஆடையை ஆசைகளை லட்சியங்களை குறிக்கோள்களை
மாற்றுகிறோம் .
இன்று உலகில் பெரும்பாலும் யாரும் நிம்மதியாக இருப்பதாக தெரியவில்லை. ஆனால் உண்மையில் எது கிடைத்தாலும் எது இழந்தாலும்
நம்மால் நிம்மதியாக சமாதானமாக சந்தோசமாக இருக்க முடியும் .
அதற்கு முக்கிய காரணம் "நாம் தான்" மாற்றிக்கொள்ள சுலபமான ஒரு விஷயம் நம் குணங்கள் .நம் மனம் தான் அதை விட்டு விட்டு மற்றவர்களை
மட்டுமே நாம் மாறசொல்கிறோம் . மற்றவற்றை மட்டுமே மாற்றுகிறோம்
ஆனால் நாம் மட்டும் அதே பழைய ஆளாக இருக்கிறோம் .
இதனால் தான் புதியன கிடைத்தும் உள்ளுக்குள் புத்தொளி வருவதில்லை
"இனிமேல் இப்படி பேசாதே இன்னொருதரம் இதை செய்யாதே மறுபடியும்
அங்கே போகதே .
இப்படி மற்றவர்களை கண்டிக்கதெரிந்த மனசுக்கு மற்றவர்களை நோக தெரிந்த மனசுக்கு மற்றவர்களிடம் குறை கண்டு பிடிக்க தெரிந்த மனசுக்கு
தன்னை கண்டிக்க தெரிந்தால் ,தன்னிடம் குறை கண்டு பிடிக்க தெரிந்தால்
தன்னை நோக தெரிந்தால் தன்னை மாற்றிக்கொள்ள தெரிந்தால் போதும் :
வேறு எதையும் நாம் மற்ற தேவை இல்லை .
நமக்குள் நாம் ஏற்படுத்திகொள்ளும் அக மாறுதல்கள் நம்மை சுகமாக
வாழவைக்கும் ; நம்மை சுற்றி இருப்பவர்களையும் சுகமாக்கி வைக்கும் ,
மாறுதல் என்பது முதலில் நம் மனதிற்குள் வரவேண்டும் .