வேண்டுமிந்த பொறுமை

..."" வேண்டுமிந்த பொறுமை ""...

கருவானாலும் முழு உருவாக்கிட
வேண்டுமிந்த பொறுமை,,,
தவழ்ந்து தட்டி மோதி எழுந்திடவே
வேண்டுமிந்த பொறுமை,,,
பள்ளி படித்து பட்டங்கள் பெற்றிட
வேண்டுமிந்த பொறுமை,,,
அரிசியோடு சீமயெண்ணை வாங்கிட
வேண்டுமிந்த பொறுமை,,,
பசியென்றாலும் சோறு வேகுமட்டும்
வேண்டுமிந்த பொறுமை,,,
சிரித்துக்கொண்டே நீ அழுதிடவே
வேண்டுமிந்த பொறுமை,,,
வறுமை நீக்கிட துணிந்து போராட
வேண்டுமிந்த பொறுமை,,,,
காத(லி)ல் ரசித்திட காத்திருக்க
வேண்டுமிந்த பொறுமை,,,
வஞ்சகனை காலமறிந்து பழிதீர்க்க
வேண்டுமிந்த பொறுமை,,,
இந்த பொறுமையில்லையேல் நீ
யாவும் இழந்தே வெறுமையாய்,,,
பொறுமையை கையாண்டு நாம்
நம் வாழ்வில் வெற்றி காண்போம் ..

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (3-Sep-14, 12:23 am)
பார்வை : 1050

மேலே