தாய்

இத்தொலைத் தூரமா என் புதிய இல்லம்?
ஐயோ பாவம்,
என் கண்ணின் மணி போன்ற மைந்தன்,
சிரமம் சிறிதும் பாராமல்,
முகம் சிறிதும் கோணாமல்,
கைக் குடுத்து ஆட்டோவிலிருந்து கீழிறக்கி,
தன் தோளிலேயே எனைத் தூக்கி,
சொகுசாக அமர வைத்து,
முதியோர் இல்லத்திலிருந்து,
தலை திருப்பாமலே,
திரும்பிச் செல்கிறானே,
பாவி எனது பாரமதை,
தூக்கியபின் கழுத்தவனது,
சுளுக்கிக் கொண்டதோ?
அவன் வேதனையை நினத்து,
மழுங்கிய என் பார்வை,
பனித்து நனைகிறதே!

எழுதியவர் : கல்கத்தா சம்பத் (3-Sep-14, 8:32 pm)
Tanglish : thaay
பார்வை : 84

மேலே