சுதந்திர நாட்டில் சுதந்திரமாய் ஒரு கனவு
இடப்பக்கம் வலப்பக்கம்
நடுப்பக்கமென
எப்பக்கமும்
கூட்டமும் நெரிசலுமின்றி
வெறிச்சோடி கிடக்கிறது
மதுபான கடைகளின் முகப்பு வாயில்கள் .....!
இரயில் வண்டியின்
நீண்ட வரிசைகள் சுருங்கி
ஓரிரு சரக்கு பெட்டிகளாய்
வந்து போகின்றன
கைப்பைகளுடன்
சில முகங்கள் ரேசன் கடைகளுக்கு....!
கொலை கொள்ளை
கற்பழிப்புகளை
சுமக்காமல்
புத்த மர இலைகளாய்
வந்து விழுகின்றன தினசரி நாளிதழ்கள் ...!
ஆசைகளை அடியோடு
அறுத்துவிட்டு
வறுமைக்கோட்டை
ஒழிக்க ஓடுகின்றன கரை வேட்டிகள்......!
கழுதை தேய்ந்த
கட்டெறும்புபாய்
நீதிமன்ற கோப்புகள்
சுருங்க
நீதிமன்ற வாசலில்
நீண்ட வரிசையில்
காத்திருகின்றன கருப்பு கோட்டுக்கள்........!
தீண்டத்தகாதவர்களே
யாரும் இல்லையென
நடுரோட்டில்
யாரோ உரத்து வாசித்து செல்ல....
திக்கு தெரியாத
தமிழக மீனவனின்
படகு போல்
வானில் பறந்து திரிந்த
வெள்ளை காகத்தை
துரத்தி சென்ற
கறுப்பு காகமொன்று
சிறகு விரித்து திரும்புகையில்
தட்டிவிட்டது
காந்திஜியின் மூக்கு கண்ணாடியை ....!
பகல் கனவு
பலிக்குமா...?
விழிக்கப்போகிறார்
காந்தி
புது விடியலை நோக்கி ....!
******************************************