கம்ப நாடன்

சிந்தனை வேந்தன் அவனே -தமிழை
சிகரம் தொடச் செய்தவனே - இந்த
மண்ணுலகில் அவன் கவி
பண்ணி வைத்த மாயங்கள்
ஏராளம்- புகழ் தாராளம்....!

அவன் கவியில் கண்ட அந்த வீறு - அது
தமிழ் அன்னை பெற்ற ஒரு பேறு - அவன்
முத்தினை தேடியே
தமிழ்க்கடல் மூழ்கிய
ஒரு வீரன் - பெரும் தீரன்...!

பாடினான் பல பாயிரம் - அதில்
மனதில் நிலைக்கும் ஆயிரம்
கவி வடித்து கவி வடித்து
கற்பக வித்தகன்
ஆகினான் - சுவர்க்கம் ஏகினான்...!

ஒரு சொல்லில் அடக்கினான் பல வாக்கியம்
அது உண்மையில் நாம் பெற்ற பாக்கியம்
விண்ணவர் செய்த
தவத்தின் பயனாக
உதித்தான் - தடம் பதித்தான்..!

எல்ல வரும் புராண ஆகமம்
எல்லாம் அவன் கவி வழி ஆகுமாம்
தமிழுக்கு ஆயிரம் ஆயிரம்
தரமான படைப்புகள்
சேர்த்தான் -என்னை ஈர்த்தான்....!

சுரங்களை கக்கும் சுக வீணை
அது தேவன் இட்ட ஒரு ஆணை
ராச கவியாக
ராவு பகல் பார்க்காமல்
உழைத்தான் - தமிழில் திளைத்தான்...!

தமிழ் என்ற தனிப்பெரும் ஆழி
அதை காத்திட்ட தமிழ் கவி வாழி
அதன் ஆழம் அறிந்திட்ட
அதிசய கவியாய்
திகழ்ந்தான் -தமிழை புகழ்ந்தான்....!

எழுதி வைத்தான் பல உண்மை
அதில் வெளிப்பட்ட உள்ளத்தின் வெண்மை
அவனை தரிசிக்கும் வரம்
தரணியில் வேண்டியே
தவிப்பேன் - ஏக்கம் குவிப்பேன்...!

எழுதியவர் : (4-Sep-14, 10:13 pm)
பார்வை : 83

மேலே