கிராமத்து சின்ன குயில்

..."" கிராமத்து சின்ன குயில் ""....

உந்தன் கடைக்கண் காதலெனும்
மொழிபேசி காத்திருப்பதாருக்கு
ஒப்பனையில்லா முகவனப்பில்
ஒய்யாரமாய் இருப்பவளே
கண்டாங்கி சேலைகட்டி
மீன் கண்களிலே மைபூசி
தேன் சுரக்குமுன் இதழாலே
மெளனமாய் புன்னகையிக்க
மலர்ந்த மலர்கலெல்லாம்
நணித்தே தன் தலையசைக்க
காது லோலாக்கு சந்தம்பாட
பல்லவிக்காய் காத்திருக்கும்
உன் கொசுவத்து முந்தானையை
இடையோடு இணைத்துவிட்டு
அந்திசாயும் நேரம்தன்னில்
மயக்கும் இளம் தென்றலிலும்
முந்தி செல்லும் நினைவோடு
ஒற்றை கொண்டை சரியகட்டி
மல்லியோடு சாமந்திப்பூ
சரிசமமாய் சேர்த்தெடுத்தே
தொடுத்துவைத்த பூச்சரமும்
சூடிக்கொள்ள மனமுமில்லை
மன்னனின்றி மணக்கவில்லை ,,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (5-Sep-14, 2:51 am)
பார்வை : 594

மேலே