கல்லறையில் காதலன்

நீ இல்லனா செத்துடுவேன்.,
நீ இல்லனா செத்துடுவேன் .,
என்று நீ சொல்லும் போதெல்லாம்,
ரசித்தேன் என் மேல் நீ கொண்ட காதலை...!

நெஞ்சளுத்தகாரி தான் நீ...
உண்மையில் நாம் பிரிய நீ உயிர்பிரிந்து நிம்மதியாய் உறங்குகிறாய்...!

செத்தும் சாகாமல் எனக்குள் நீ...
வாழ்ந்தும் வாழாமல் புவி மேல் நான்....!

கல்லறையில் பூங்கொத்து வைப்பதில் இல்லையடி என்காதல்...
பூங்கொத்தில் ஒரு பூவில் மட்டும் பன்னீர் துளி போல் என் கண்ணீர் துளி கண்டாயா.???
அந்த துளி வழி வழியும் நம் காதல் வலி கண்டாயா....?

தனியாய் புலம்பும் எனக்கு பெயர் பைதியகாரனாம் ஊரில் சொல்கிறார்கள்...
இந்த பெயர் கூட பிடித்திருகிறது...,
நீ செல்லமாய் என்னை அழைத்த பெயராயிற்றே...!

எழுதியவர் : கெளதம் (5-Sep-14, 2:11 pm)
பார்வை : 113

மேலே