காட்சிப்பிழை
அரங்கம் முழுதும்
'அற்புத நடிப்பென்று'
ஆரவாரம்..!!
தாய் மனம் பொங்கிய
கன்னியின் கண்களில்,
கண்ணீர் காவேரிகள் .!!
கனவான்களின் கணிப்பில்
பேசபடுகிறது..
இந்த வருடத்திற்கான விருது,
'குழந்தை தொழிலாளி'
வேடமிட்ட நட்சத்திரத்திற்கு என..!!
'சார் ...சுண்டல் ..!!'
என்று கூவியபடியே
திரியும்
படிப்பறியா சிறுவனின்
முகம் தெரிவதில்லை..
ஒருவருக்கும்..!!