அனுமதி
பொருத்தமாய் இருந்தது அந்த செருப்பு !
வாங்கிக்கொள்ள அனுமதிக்கவில்லை கணவன் !
அவனைத்தான் அனுமதியில்லாமல் புகுத்தினார்கள் !
இதைக்கூடவா தேர்ந்தெடுக்கக் கூடாது நான்?
அடங்கிப்போவதும் மடங்கிப்போவதும் !
அவ்வப்போது பெருமை மணாளன் மனதுக்கு !
நிஜத்தில் அது அவனுக்கே அவன்வைக்கும் சூனியம் !!