ஆசிரியர்கள் தினம்
ஆசிரியர்கள் தினம்
எழுத்தறிவித்தாய், ஏடு பிடித்து, எழுத கற்றுக் கொடுத்தாய்
எதிர்கால கனவுகள் காணச் செய்தாய்
எதிர் நீச்சல் போட, கற்றுக் கொடுத்தாய்
கம்பை பிடித்தாய், கையில் அடித்தாய்,
கட்டுப்பாடோடு வாழ கற்றுக் கொடுத்தாய்
ஊக்கப் படுத்தினாய், உழைப்பின் பெருமையை, உணரச் செய்தாய்
எண்ணங்கள் பிறந்தன, ஐயங்கள் தீர்ந்தன
எங்களை, நாங்கள் அறிந்தோம்
எழுச்சியுடன், எழுந்து நடந்தோம்
வெற்றி பெற்றோம், வளமாக வாழ்கிறோம்
உன்னை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்