என் ஆசிரியர்களுக்கு

கடினமாகத்தான் இருக்கிறது
இக்காவியன்களைக் கவிபாட
எனக்கு !
பெரிதாய் ஒன்றும் சொல்லிவிடப்
போவதில்லை !
பெரியோர்களைப் பற்றி இச்சிரியன்
நான் !
எப்படி முடிகிறதோ இவர்களால்
மட்டும் !
அனைத்தும் அறிந்தும் ஆ-சிறியராய்
இருக்க !
சும்மாவா சொன்னார்கள்
ஆசான் என்று !
சுடும் நெருப்பும்கூட சுகமான
ஒளியாகும் விளக்கில் !
அப்படித்தானே ஒளியானோம் நாங்கள்
நீங்கள் திரியானதால் !
இத்தனை நாட்கள் காத்திருந்தோம்
அமாவசை நிலவாக !
இன்றுதான் அழகாணோம்
உங்களிடம் ஒளிவாங்கி நாங்கள் !
போட்டிக் குதிரைகள் நாங்கள்
வென்றதெல்லாம்
கடிவாளமாய் நீங்கள் இருந்த
காரணத்தால் !
பூட்டிக்கிடந்த என் வாழ்வைத்
திறக்கும் வழியைக்
காட்டிக் கொடுத்தீர்கள்
எமக்கு !
கடவுள் நம்பிக்கை கிடையாது !
எப்படி நம்பாமல் இருப்பது
இவர்களைக் கண்ணால் கண்ட பிறகு !
என்ன வரம் கேட்பது !
கேட்பதற்குள் கொடுத்துவிட்டார்கள்
எங்களுக்கே தெரியாமல்
எங்களுக்குள் இருந்த எங்களை
எங்களுக்கு வரமாக !
என்ன யோசிக்கிறீர்கள் !
எழுதுங்கள் மீண்டும் ஒரு
பகவத்கீதை !
துவாரகையில் மட்டுமல்ல எங்கள்
துறையிலும்கூட அன்பெனும் குழல்
ஓசைதான் எங்கள் கிருஷ்ணனால் ! (Dr . Krishnan)
கட்டி முடிக்க கோவில்கள் இல்லை
இத கட்டிக்கொண்டிருக்கிறார் தன
அன்பால் எங்கள் இதயங்களை ! (Dr . பாபு iraajenduva)
கோ-அரசன்தான் ஐவரும்
விந்தைகள் புரிந்து எம் சிந்தை
கவர்ந்த இளவரசன் இவர் ! (Dr . கோவிந்த இராஜ்)
பாடலாசிரியர் அல்ல இவர்
என்றாலும் பாடல் போல்
இனிக்கிறது இவர் பாடங்கள் !
தரையில் பூக்காது என்றாலும்
எம் துறையில் பூத்திருக்கிறது தாமரை ! (Dr . தாமரைசெல்வி)
சர்வமும் சிவமயம் !
புரியாத வாக்கியத்தின் அர்த்தம்
புரிந்தது ! (Dr. Sivamudha)
எப்படி என்று தெரியவில்லை
வளைந்து கிடக்கிறது எங்கள்
உள்ளம் !
ஆம் அன்பெனும் நாணேற்றிய
ஆச்சர்யத்திர்க்குரிய இராமன் இவர் ! (Dr . Achiraaman)
தீ என்றால் சுட்டுவிடும என்ன !
அல்ல அல்ல எங்கள் வாழ்வை
வசந்தமாக்க வந்த தீ இவர் ! (Dr . Vasanthi)
உலகிற்கு படியளக்கும்
உமையவள் இவர் அல்ல என்றாலும்
எங்களுக்கு படிப்பளக்கும் மகேஸ்வரி இவர் !(Dr . uma mageswari)
பெருமைக்காக அல்ல
பெருமையோடு சொல்கிறோம்
நாங்கள் உங்கள் மாணவர்கள் என்று !
உதிர்ந்த மலர்கள் விதைக்கு
உரமாவது போல !
தாங்கள் உதிர்த்த வார்த்தைகளால்
வளர்ந்து நிற்கிறோம் !
உயர்வாய் என்ன இருக்கிறது
எங்களிடம் !
எங்கள் அன்பு ஒன்றித்
தவிர !
இன்று மட்டுமல்ல என்றுமே
இடி மின்னல் இல்ல இளஞ்சாரல்
உங்களை நனைத்த்கொண்டே இருக்கும்
இந்த முகில் தனது
அன்பு மழையால்!