வதைக்கும் தேவதை

.."" வதைக்கும் தே(வதை)""...
தேவைகள் புரிந்தே நேர்த்தியாய்
பூர்த்திகள் செய்திடும் தேவதையே
சின்ன தூறலின் மணல் வசமாய்
மொட்டு விரியும் மலர் மணமாய்
மனதுக்குள்ளே வந்து வீசுகிறாய்
தென்றலாய் வந்து புயலாய் மாறி
என்னை தீண்டி செல்லவில்லை
செல்லமாய் தூண்டி செல்கிறாய்
நொடிக்கு நொடி சிலந்தி பின்னல்
கொடியாய் என்னில் நீ படர்ந்தாய்
இரவுகள் மெல்ல கரைந்துசெல்ல
கனவுகள் கொஞ்சி கடந்துசெல்ல
கீற்று மின்னலாய் உந்தன் பிம்பம்
சாடென அதிலே வந்தே மறைய
துள்ளி குதித்து துடித்து எழுந்தேன்
என் குருதி சூடேறிய வெப்பத்தால்
வியர்வையில் குளித்து நனைந்து
என்னோடு சேர்ந்தே இரவும் விடிய
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..