குட்டிப்பாப்பாவுக்கான கணக்குகள்

" ரெண்டும் ரெண்டும்
எத்தனை ? "
என்கிறேன்
குட்டிப்பாப்பாவிடம் !

" ரெண்டும் ரெண்டும்
ரெண்டு "
என்கிறாள்
குட்டிப்பாப்பா !

" மூணும் மூணும்
எத்தனை ? "
என்கிறேன்
குட்டிப்பாப்பாவிடம் !

" மூணும் மூணும்
உம்மூஞ்சி "
என்கிறாள்
குட்டிப்பாப்பா !

" நாலும் நாலும்
எத்தனை ? "
என்கிறேன்
குட்டிப்பாப்பாவிடம் !

" நாலும் நாலும்
தெரியாது "
என்கிறாள்
குட்டிப்பாப்பா !

" அஞ்சும் அஞ்சும்
எத்தனை ? "
என்கிறேன்
குட்டிப்பாப்பாவிடம் !

" அஞ்சும் அஞ்சும்
சொல்ல மாட்டேன் போ "
என்று பழிப்புக்காட்டி
ஓடுகிறாள்
குட்டிப்பாப்பா !

குட்டிப்பாப்பா
சொன்ன
அத்தனை விடைகளையும்
தனக்கான
சரியான விடைகளாக
ஆக்கிக்கொள்கிறது
கணக்கு ,
" குட்டிப்பாப்பா சொன்னால்
சரிதான் "
என்று !!!

==========================
- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (7-Sep-14, 3:55 pm)
பார்வை : 130

மேலே