நாடும் நலம் பெற
துயரம் மறந்து துயர் தந்த
பாடம் நினைவில் கொண்டு
பாதை தனை வகுத்து பலர்
துணை கொண்டுஅவர்களை
உயர்த்திட்டு அவர்களால் நாமும்
உயர்வான வாழ்க்கையை துயரின்றி
வாழ்ந்திட கற்றிட்டால் நாம்
மட்டுமல்ல நம் நாடும்
நலம் பெற நல்லது செய்தவர்களாக
நிம்மதி பெற்றிடுவோம் சற்றே
சிந்திக்க சின்னதொரு யோசனை