நிழலற்ற நிஜம்
அதிகாலை மணி ஐந்துஅலாரமில்லாமலே விழிப்பு
அன்றாட நடப்பு இறைவனுக்கு நன்றி இன்றைய நாளை
கொடுத்தமைக்கு என சொல்லி எழுந்து மெதுவா
கதவை திறந்து தெருவைப்பார்த்தேன் நிசப்தம்
எங்கும்மெல்ல வெளியி்ல்வந்தேன்நடைபயில
அன்றாட நிகழ்வென்றாலும் தினமும்
ஒரு புதிய அனுபவம் நடக்கஆரம்பித்ததுமே
நாய் ஒன்று எங்கிருந்தோ ஓடி வந்து
அருகில் நின்றது சற்றேஉள்ளே உதறல்எடுத்தாலும்
வெளிக்காட்டாமல் நடக்க ஆரம்பித்தேன் கூடவே
சற்று தூரம் வந்த நாய் திரும்பி செல்ல
நிம்மதியாகமூச்சு விட்டபடி நடையை
தொடர்ந்தேன் காகங்கள் சத்தமும் குயிலின்
குரலும் கேட்டது சிலுசிலு வென்றகாற்றில்
மிதமான குளிர் உடலைத் தொட்டது பால்
கொண்டு வருபவரின் மிதிவண்டி சரக் சரக்கென
சப்தம் பராமரிப்பு கண்டு எவ்வளவு நாளோ என
எண்ணத்தோன்றியது இதமான காற்றினை
சுவாசித்தபடியே நடந்தேன் எவ்வளவு பேர் நம்மைப்
போல என்றெண்ணினேன் இந்த நேரம் ஆழ்ந்த
உறக்கத்தில் உள்ளவர்களை நினைத்து சற்று பொறாமை
வந்தாலும் எங்கோ ஒரு வீட்டில் வரும் குக்கர் விசில் சப்தம்
ஓரளவு நிம்மதி தந்தது அரைமணி நேர நடை
அன்றாடம் ஆரோக்கியம் தருதோ இல்லையோ
காலையிலேயே தேவையற்ற சிந்தனைகளை தரத்
தொடங்கிவிடுகிறது நிழலற்ற நிஜம்
சாத்தியமற்ற ஒன்றே பல நேரங்களில்....