ஓணத் திருநாள் வாழ்த்துக்கள்

ஓணத் திருநாள்...

கனத்தை தலையினில் ஏற்றி
ஆணவத்தை வாழ்வில் வைத்து
அதிகாரத்தில் வாழ்ந்த மகாபலி
மகாபாவியில்லை மன்னவனாய்!!!

அவன் செருக்கை நீக்கிடவே
செருக்கழிக்க நாள் குறித்தான்
ஆண்டவனும் பூமியிலே
அவதரித்தான் வாமனனாய்!!!

கட்டை குட்டை உருவினில்தான்
உலகாளும் மகாதேவன் தோன்றி
மன்னனிடம் தானமென கேட்டநிலம்
மூன்றடி... மூன்றடி மட்டுமாய்!!!

மன்னன் ஏளனப் பார்வையுடனே
எக்காள சிரிப்பினை உதிர்த்து
இறைவனைப் பார்த்த பார்வை
அவனகந்தை எடுத்துச் சொல்வதாய்!!!

உருவம் சிறிதென கண்டான்
ஆணவத்தில் வார்த்தை மறந்தான்
எடுத்துக் கொள் மூன்றடிதானே
என்றானே மகாபலி எக்காளத்துடனே!!!

வாமனனும் வானுயர்ந்து நின்றுவிட
ஓரடியால் வானம் அளந்தான்
ஓரடியால் பூமியும் அளந்தான்
மூன்றாமடியளக்க எதுவுமில்லைதானே!!!

மகாபலி கூனிக் குறுகி நின்றான்
தன் செருக்கை தானுணர்ந்தே
இறைவன் முன் தலைகவிழ்ந்தான்
மூன்றாமடிக்கு அவன் தலையாய்!!!

அவன் தலை பாதம் வைத்து - இறைவன்
அழித்திடவே நினைத்த வேளை
மகாபலி ஆணவம் அகன்றிட
வரமொன்றை கேட்டு வைத்தானே!!!

ஆண்டு தோறும் மக்களை
காண வேண்டிய வரம் ஆனது
கடவுளும் தந்தருள் புரிந்தான்
அந்நாளே ஓணத்திருநாளாய்!!!

மக்களுக்காய் வந்து செல்லும்
மகாபலியை வரவேற்க மங்கையரும்
வாசலிலே பூக்கோல அலங்கரிப்பில்
அழைக்கின்றார் ஆடலுடன் பாட்டிசைத்து!!!

அன்புடன் நேசம் பிணைத்தே யாவரும்
ஆடியும் கூடியும் களித்தே இன்று
வாழ்த்துக்கள் பகிர்ந்தே மகிழ்ந்து
கொண்டாடிவோம் ஓணத் திருநாளதுவை!!! ...

எழுதியவர் : சொ.சாந்தி (7-Sep-14, 6:00 pm)
பார்வை : 1562

மேலே