லவ் கேயாஸ்
பேசுகின்றேனா? இல்லை!
இயலாமையின் அளபெடையில்
எழுதுகிறேன்..
காதல் வருடும்
என்று காத்திருந்த
காகிதம் ஒன்றில்
என் இதழ் நெருட மறுத்த
வார்த்தை திவளைகளின்
ஈரங்களை
இம்மி பிசிறாமல்...
உன் முகநூல் முகப்பில்
மூழ்கிய கணம் தொட்டு
மூளை முடுக்கெல்லாம்
உன் மூச்சிசையின் முனங்கல்..
ஆளரவம் இல்லா
அபாய சங்கை
காதல் முழங்கிட,
ஏதும் பேசாமல்
ஐந்தறிவும் தொலைந்து போகும்
"அஃறிணை ஒப்பந்தத்தில்"
கைரேகை பதித்தேன்...
"CHAOS THEORY " களிலே
சுதந்திரமாய் உலாவித் திரிந்த
பட்டாம்பூச்சி ஒன்றை,
பாவம்!
என் காதல்
சிறை எடுத்தது...
எழுதினேன்..
வரைந்தேன்..
வார்த்தை வரிகளில்
வாட்டி வதைத்தேன்...
காதல் கணைகளில்
கிழிந்த இறக்கைகளை
கவிதைக் கட்டுகள்போட்டு
காப்பாற்றினேன்..
உனக்கான என்
இதயதுடிப்புகளில்
நாள்கிழமை பார்க்காமல்
பட்டாம்பூச்சியுடன் உன்னையும்
குடியேற்றினேன் ...
விளைவு?!
கேன்டீன் வாசலிலே
தூண்களின் இடைமறைவில்
உன் நெஞ்ச நெரிசலுள்
என் நிமிடங்கள்
தொலைந்து போயின...
வாழ்கையில்
முதல் முறையாய்
நண்பர்களுடன் நான் ஜெயித்த
"K"-போட்டியை
கடவுளுக்கு சமர்ப்பித்து
சாணக்கியனாய் மாற
மனம் கொள்ளாமல்
"அவளே காரணம் " என்று
சாமானியன் வேடமிட்டு
சந்தோஷிதேன்...
கனவுகளில் என்னிடம்
நீ உதிர்த்த
வார்த்தைகள் ஒன்றிரண்டு
நிகழ்கால உண்மையின்
வெப்பம் தாளாமல்
கானல் நீருடன்
உடன்கட்டை ஏற...
அறிவியல் பேசும்
"QUANTUM THEORY " மட்டும்
என்விழி வழி வழியும்
விகற்பமற்ற கண்ணீரை
கைகலசம் ஏந்தி
காப்பற்றியது...
ஆம்..!
உலகின் மறுபாதியில்
நானும் நீயும்
சேர்ந்து வாழ்வோமாம்...
அங்கே
பட்டாம்பூச்சிகளின் சிரகோசைகள்
"CHAOS THEORY" களில்
மட்டுமே சஞ்சரிக்குமாம்...
அங்கேனும் உன்,
இமை இழைகளின் நெருக்கத்தில்
செவிமடல்களை
"சில்மிஷ சில் குளிரால்"
சிணுங்கச் செய்து
இசை பிணவின்
இனிமையில்
என் இதழ்கள்
இயம்பட்டும்
"I LOVE U" என்று -JK