இவள் எதிர்பார்க்கும் மாப்பிள்ளை - 2

என்னை மறந்து தூங்கிடும்..
உன்கதை பேச்சு வேண்டாம்...!
தூக்கத்தை துரத்தி விரட்டும்..
காதலிம்சை கொடுத்தாலே போதுமென்பேன்...!!
விடியல்களில் என் முகத்தை..
உன்விழிகள் தேட வேண்டாம்...!
இன்னும் சிலநொடிகள் நான்ரசிக்க..
தூங்குவதாய் நடித்தாலே போதுமென்பேன்...!!
போகும் பாதையெங்கும் முள்ளில்லா..
மலர்களை விரிக்க வேண்டாம்...!
ஒற்றை மலரேயாயினும் உன்..
கைகளால் சூடினால் போதுமென்பேன்...!!
புத்தம்புது திரைப்படமென திரையரங்கிற்கு..
பார்க்க செல்ல வேண்டாம்...!
நான் பார்க்கும் தொலைகாட்சி..
தொடர்களைபற்றி வினவினாலே போதுமென்பேன்...!!
அன்னையின் கைமணக்காரியென கைகளுக்கு..
தங்க வலையல்களிட வேண்டாம்...!
ஆசையில் உடைந்து போகும்..
கண்ணாடி வளையல்கள் போதுமென்பேன்...!!
அழகிய இடங்களை தேடிப்பிடித்து..
உலகத்தை சுற்றிவர வேண்டாம்...!
என் உலகம் எதுவென..
நீ அறிந்தாலே போதுமென்பேன்...!!
சிறுபிள்ளையாய் மாறி என்னிடம்..
பலகுறும்புகள் செய்ய வேண்டாம்...!
எட்ட நின்று கள்ளமாய்..
சிறு பார்வை போதுமென்பேன்...!!
தொலைதூர பயணத்தில் உடன்..
அழைத்து செல்ல வேண்டாம்...!
விரைவில் வருகிறேனென்று சொல்லி..
கண்ணீரை துடைத்தாலே போதுமென்பேன்...!!
செவியில் வியர்வைவர கைப்பேசியின்..
நெடுநேர உரையாடல் வேண்டாம்...!
தனிமையில் படித்து சிரிக்க..
அன்பாயொரு குறுஞ்செய்தி போதுமென்பேன்...!!
கைபிடித்த கணவனென்று கருவிழியென..
இமைகளுக்குள் காக்க வேண்டாம்...!
வாழ்ந்துகாட்டுவோம் என்று சொல்லும்....
தோழனென கைக்கொடு இதைத்தவிர...
வேறேதும் எதிர்பார்க்கவில்லை உன்னிடத்தில்...........!!!!
.....!!!இவள் எதிர்பார்க்கும் மாப்பிள்ளை!!!.....