இயற்கை மடியில்
கணநேரம் கண் விழித்து
சஞ்சாரங்களின் சங்கதிகளை
மீட்டுப்பார்த்தேன்......
சந்தனம் மணக்கும் ஏகாந்த இரவில்
பௌர்ணமியின் மௌன ராகம்
கேட்டேன்....
தன் உடல் துளைத்து
இசைத்தந்த மூங்கில் குழலின்
ஒலியை இரசித்தேன்.....
தேன் சுமக்கும் பூஞ்சோலைதனில்
வர்ணம் கொண்ட
புதுமலரைப்பார்த்தேன்......
கால் தடம் பதித்துப்போன
கடற்கரையின்
சோகம் கேட்டேன்...
எழுவர்ணம் சுமந்துப்பறக்கும்
வானவில்லின் அழகை
பார்த்தேன்......
என் கண்ணீர் என் கன்னம்
நனைக்கும் வேளைகளில்
அனாதையாகிறேன்.....
ஆனாலும்......
என் இயற்கை அன்னை மடியில்
குழந்தையாகிறேன்.......