அன்னம் தோற்றது
அன்னம் தோற்றது
அவள் நடையில் !
அறிந்தவர் யாருமில்லர்
அவள் இரு விழி பற்றி !
சொன்னது எனக்கு சோலை மலர்
தராத நறுமணத்தை அவள் குழல் !
சங்கிலித் தொடரை என் காதல்
உடைபட மறுக்கிறது !
சங்கொலியாய் அவள் காதல்
அனைவருக்கும் என் மரணம்
அறிவிக்க !
எனக்கு மட்டும் சொல்கிறது
ஏனோ மாங்கல்யம் வாங்க !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
