ப்ரியாவின்-நாளுக்கு நாள் அழகாய் நீ

ப்ரியாவின்-நாளுக்கு நாள் அழகாய் நீ......!
என்ன சொல்ல....
நாளுக்கு நாள்
உன் அழகியல்
ஆக்கிரமிப்புகள்
அதிகமாகிக்கொண்டே இருக்கிறது....!!
சில சமயங்களில்
உனதன்பு சிறு மின்மினி
ஏந்திக்கொண்டு
எனை பின்தொடர்ந்து
வரும்போது......!
சில சமயங்களில்
உன் நிழல்
எனக்கு நிழல் தரும் போது.....!
சில சமயங்களில்
உன் கருணை பார்வைகள்
உண்மை உரைக்கும் போது.....!
உன் துயரங்கள்
பகிர்ந்து விட்டு
கண்ணீரோடு சிரிக்கும்போது.......!
தொட்டும்
தொடாமலும்
என் தலை தட்டும் போது......
எனக்கான
கவிதைகளை
நீ வாசிக்கும் போது
வர்ணனனைகளற்ற
கவிப்போர் தொடுக்கும்
போது என.......
நாளுக்கு நாள்
அழகாய் என்னிலே வளர்கிறாய்......!!