கனவு கண்டேன் களவி கொண்டேன்
கண்ணோடு கண்கள்
பேசவும் கண்டேன்
மரத்தோடு கொடியிடை
பிணையவும் கண்டேன்
ரோஜா இதழ்கள்
தீண்டவும் கண்டேன்
முட்கள் தீண்டி இதழ்கள்
வலிக்கவும் கண்டேன்
எரியும் தீயை
அணைக்கவும் கண்டேன்
அணைத்த தீயை
நினைக்கவும் கண்டேன்