கண்ணீர் தடாகம்

தரிசாய் போன நெல்வயல்கலில்
கால் மிதிக்க முடியாமல் துடிக்கிறபோதும்
கொத்து கொத்தாய் விவசாயிகள்
செத்து மடியும்போதும்
அடைபட்ட கர்நாடக எல்லைக்குள்
கண்ணீர் வடிக்கிறாள்
பெண்ணாக பிறந்த காவிரி,`
-பாவம் அவள் கதை .
தன் பிறந்த வீட்டிலும் கூட
கண்ணிர் சிந்துகிறாள்
கழனி நெல் நனைத்த அந்த நன்மகள் காலோடிந்தாள்`
-பசியோடு அழுகிற குழந்தைக்கு
பால் கொடுக்க முடியாத
அன்னையை போல இன்னும் அழுது
கொண்டேதான் இருக்கிறாள்,
-தாகங்கள் தீர்க்காத
தடாகமாய் பிறந்ததற்கு,

எழுதியவர் : ஈவோன் (9-Sep-14, 1:39 am)
Tanglish : kanneer THADAAKAM
பார்வை : 285

மேலே