எருமையின் பெருமை

தமிழனே தமிழைக் கொல்லலாகுமா? -அவனைத்
தமிழனென்றே நாம் சொல்லலாகுமா?
தாய்மொழி பழிப்பவன் பேடியல்லவா? -தெரு
நாய்வரும் 'லொள்ளென ஓடியல்லவா?

அடுத்த மொழியினில் பெருமை- தேடி
அலைவதும் இல்லையே எருமை
படித்த இவனும் மறந்தானோ? - தமிழைப்
பழித்த ததனால் இறந்தானோ?...

பேசிடப் பெருகிடும் காதல் -தமிழ்ப்
பெருமையை மறப்பது தீதல்
கூசிட என்னடா உண்டு? - இதன்
குணங்களை நீயறி கண்டு!...

மிருகத் தினும்நீ இழிந்தாய்-சொந்த
மொழிபேசல் கீழென மொழிந்தாய்
சிறுகச் சிறுகநீ அழிவாய்..- நாளை
சீக்குடன் சாவாய் கழிவாய்!....

எழுதியவர் : அபி மலேசியா (9-Sep-14, 12:18 pm)
பார்வை : 423

மேலே